Sunday, 20 November 2022

Madham

மதம்  

மதமெனும்  பேய்  எனைப்  பிடியாதிருக்க வேண்டும் 
வள்ளலார்  வாக்கு  - ஆம் 

மதம்  தான்  மனிதனைப்  பிளவுபடுத்துகிறது 
மதம் தான்  மனிதனை  மிருகமாக்குகிறது 

மதத்தை  கொண்டு வந்து அரசியலோடு  கலப்பதால் 
மானுடம்  தன்னைத்  தாழ்த்திக்கொள்கிறது 

சகிப்புத்தன்மையும் , பொறுமையும்  தான்  
நம்மைக்  காப்பாற்றும்  பெருந்தன்மையாகும்

மதத்தை  வைத்து  நம்மை  பிரித்தாளும்  
சூழ்ச்சிக்கு  யாரும்  இடம்  தராதீர் 

மதத்தை  வைத்து  கலவரம்  செய்வதும் ,
மதமாற்றம்  செய்வதும்  சட்டப்படி  தடுக்க  வேண்டும் 

ஜாதி , மத பேதங்கடந்து  மக்கள்  வாழும் வரையில்  தான் 
அமைதி  தவழும்  தேசமாய்  பாரதம்  திகழும் 

மதவாத  அரசியலை  புறந்தள்ள  வேண்டும் 
மதசார்பற்ற ஜனநாயக  சக்திகளை  வலுப்படுத்தவேண்டும் 

எல்லா  மதமும்  அன்பைத் தான்  போதிக்கிறது 
அரசியல் தான் மதத்தில் விஷத்தைக்  கலக்கிறது 

ஆண்டவனை  நேசிப்பதை  விட  அடுத்த  
வீட்டுக்காரன்  நலனை  நேசிப்பதே  உத்தம  தர்மம் 

நாயன்மாரும்  , ஆழ்வாரும்  ,சித்தர்களும்  அவதரித்த  தேசம் 

பகைவர்க்கும்  அருள்வாய்  நன்னெஞ்சே  - பாரதி வாக்கு  

தீமை செய்தவர்க்கும்  அவர்  நாண  
நன்மை  செய்வோம்  - வள்ளுவன்  வாக்கு 

வாடிய பயிரைக்  கண்ட  போதெல்லாம் 
வாடினேன் - வள்ளலார்  வாக்கு 

  சமத்துவம்  , சகோதரத்துவம்  , சகிப்புத்தன்மை 
இவை தான்-  இஸ்லாத்தின்  உயிர்  நாடி 

உன்னை  நீ  நேசிப்பது  போல  பிறரையும்  
நேசிக்கக்  கற்றுகொள் - பைபிள்

இவையெல்லாம்  தான்  நமது  இயல்பு 

இந்தியா  இன்னமும்  மதசார்பற்ற  நாடு 
இந்தியர்கள்  அனைவருக்கும்  உரிமையுள்ள  நாடு  

வாழ்க  நம்  பாரதம்  !
வெல்க  நம்  பாரதம் !

---த .சத்தியமூர்த்தி