Saturday, 26 December 2020

Piriyaa Vidai part-5

                                         பிரியா விடை -5

தமிழாசிரியரும்  அவர்  மகளும்  பேசுவதைக்  கேட்டு 
உள்ளே  நுழையாமல்  வாசலில்  நின்றேன் 

தமிழாசிரியர்  தன்  மகளைப்  பார்த்து ,
"உதயணனைப்   பற்றி  என்ன  நினைக்கிறாய் ?"
என்று  கேட்க   

(உதயணன்  வேறுயாருமல்ல  நான்  தான்  நானேதான்)

"கவிதையைப்   பேசி  பேசி  காலத்தை 
வீணாக்கும்  பொறுப்பில்லை 
இளைஞன்  
-இதற்கு  மேல்  என்னப்பா  சொல்ல "

என்று  சொல்லும்  மகளைப்பார்த்து  ஆசிரியர் 

"அவனுக்கும்  ஒரு  நல்ல  வேலை  கிடைக்கும் 
அவன்  மிக  நல்லவன் 
ஆண்டவன்  அவனை  கை விட மாட்டான்"

கேட்டுக்கொண்டிருந்த 
 என்  கண்ணில்  கண்ணீர்  சுரந்தது 

நான்  உள்ளே  செல்லாமல் 
வந்த வழியே  திரும்பி விட்டேன்  
மானசீகமாக  தமிழாசிரியரிடம்  விடைபெற்றேன் ..

வேலைக்  கிடைத்த மகிழ்ச்சியை  தெரிவித்து விட்டு
மகளைப் பற்றி  பேசத்தான்  ஆவலோடு சென்றேன் 

நான்  அவளிடம்  எதிர்ப்பார்த்தது  அவள்  காதலை 
அவளோ  என்னிடம்  எதிர்ப்பார்த்தது  ஒரு 
பாதுக்காப்பான  வேலையை 

அதை  யார் வேண்டுமானாலும்  தரலாம் 

அதற்காக  அவள் மீது  எனக்கு  கோபம்  இல்லை  

கண்டதும்  காதல்  என்ற  உணர்ச்சி  வேகத்தில் 
வேலை  இல்லாத  இளைஞனை  ஆசைப்பட்டு 
 காலமெல்லாம்  கவலைப்படும் 
 அப்பாவிப்பெண்  அவளல்ல  

அது வரையில்  மகிழ்ச்சியே !

அவளிடமிருந்து  பிரியா  விடை பெரும்  உதயணன் 

பிரியா விடை முற்றும் ...

----த.சத்தியமூர்த்தி 

 

Saturday, 19 December 2020

Piriyaa Vidai part-4

 பிரியா விடை -4

முதுகலைப்   பட்டம்  பெற்ற  இளைஞன் அந்த  
ஊரிலேயே  நான்  ஒருவன் தான்

வேலைத்  தேடி  கிடைக்காமல்  அலுப்போடு 
ஊர்  வந்து  சேர்ந்தவன் ,
மீண்டும்  வேலை  தேடி , நகரம்  செல்ல 
புறப்பட்டப்  போது  தான்  

தமிழாசிரியர்   பெண்ணவளைச்  சந்திக்கும் 
 வாய்ப்பு  பெற்றேன்

தமிழாசியர்  ஆசிரியர்  பணியோடு  மாலையில்  
ராமாயணச்  சொற்பொழிவை 
 பாராயணம்  செய்துவந்தார்

தமிழ் சொல்லும்  அழகு  கேட்டு 
கதையோடு  ஒன்றிப்போனேன் 

அவரோடு  இலக்கியத்தைப்பற்றி 
  மணிக்கணக்கில்   பேசி  மகிழ்ந்தேன்   

தமிழறிஞர் என்ற  காரணத்தால் 
உயிராக  மதித்தேன் 

நான்  எழுதும்  கவிதைக்கெல்லாம்  
மதிப்புரை   எழுதும்  அளவிற்கு  
குருவாகப்   பார்த்தேன் 
 
அவர்  வாயார  பாராட்டிய போதெல்லாம்  
மனமார  மகிழ்தேன் 

மகளை  மணமுடித்து  கொடுத்தவுடன் 
தமிழாராச்சியில்  முழுநேரம் 
 இறங்கப்போவதாக  சொல்லக்கேட்டேன் 

--இதற்கிடையில் 
பூங்கவனம் கிராமத்திற்கு  அதிகாரியாக  
வேலைக்கிடைத்த  மகிழ்ச்சியில்  
தமிழாசிரியர்  இல்லம்  நோக்கி 
அரசு  ஆணையோடு   புறப்பட்டேன் ...

பிரியா விடை  தொடரும் 

-----த .சத்தியமூர்த்தி  

Saturday, 12 December 2020

Piriyaa Vidai part-3

பிரியா விடை -3

என்  பதில்  கேட்டு  கொஞ்சம்  இறங்கி  வந்த  கோதையவள் , 
புதிதாக  ஊருக்கு  வந்திருக்கும் 
தமிழாசிரியர்  மகள்  நான் .. என்று சொல்லிச்சென்றாள் 

எனைச்சுற்றி  ஓர்  தனிமை   சுழல்வதை  வெறுத்து 
நானும்  எழுந்து  மெல்ல  நடந்தேன் .. ஊர்  நோக்கி 

கவிபாடும்  பித்தன் , வேலை  வெட்டி  அற்றவன் , 
ஊரில்  உள்ளோர்  எனக்கு  வைத்த  செல்லப்  பெயர்கள் ..

ஊரின்  பெயரோ  பஞ்சவர்ணச்சோலை  
பெயரில்  தான்  சோலையே  தவிர 
 ஊரில்  தென்பட்டதோ 
எங்கும்  பஞ்சம்  தான் ...

ஊருக்கு  உணவளிக்கும்  விவசாய  குடிகள் 
கூலிவேலை  செய்து  வயிறு  பிழைக்கும் 
 கொடுமை நடந்தது.

மூன்று  வருடம்  தொடர்ந்து  மழை  பொய்த்ததால் 
நெல்  விளையும்  வயலெல்லாம்
  முட்புதராய்  மாறியது.

அதிகாரத்தில்  உள்ளோர்  அடுக்கடுக்காய்  
மரங்களை  வெட்டி  விட்டால் , 
மணலை  அள்ளி  விட்டால் ,

அவர்கள்  பை  வேண்டுமானால்   நிரம்பலாம்
மழை  எப்படி பெய்யும் ?

புயல்  வந்தால்  மட்டும்  தான் 
மழை  பெய்யும்  என்ற  
நிலைக்கு  நம்மை  தள்ளி  விட்டார்கள் ..

பிரியா விடை தொடரும் ...

--------த .சத்தியமூர்த்தி  

  

Saturday, 5 December 2020

Piriyaa Vidai part-2

பிரியா  விடை -2

"சற்று  முன்பு  கேட்ட  பாடல்  நீ  பாடியதோ ?
சாந்தமுடன்  அவளை  நோக்கி  நான்  கேட்டேன் 

நாணமது  முகத்திரையாய்  வந்து  விழ, 
மின்னலது  பார்வையென  வந்து  மோத, 
தித்திக்கும்  பாகாக  வார்த்தை   வந்து  விழ,

அலட்சியமாய்  எனைப்பார்த்து 
 அழகாக  அவள்  சொன்னாள்..

   தெரிந்து  கொண்டு  என்ன  பயன் ?

பாடலை  ரசித்தீரா?
பாடலை  பாடிய  எனை  ரசித்தீரா ?

தனிமையிலே, ஒருமையிலே  வரும்
மயில்  எந்தன்  வழி  மறித்து  
மடமையாக  கேள்வி  வேறு  
கேட்பது  தான்  தமிழ்  பண்போ  ?

நான்  கேட்ட  ஒரு  கேள்விக்கு 
அடுக்கடுக்காய்  அடுத்தடுத்து  பல  
கேள்விகளைக்   கேட்டு  நின்றாள் 
  
 "தவறாக  உனைப்பார்த்து  நான்  என்ன 
கேட்டு விட்டேன்"
பாடலையும்  ரசித்தேன்
பாடலுக்குரிய  உன்னையும்  ரசித்தேன் 

உன்  தமிழ் பண்பாட்டைக் கண்டு வியந்தேன் 

"நானொன்றும்  நீ  நினைப்பது  போல் 
காமுகன்  அல்ல !  கவிஞன்  

அழகை  ரசிக்க  ஆண்டவனால்  
அனுப்பப்பட்ட  தூதன் 

பிரியா விடை  தொடரும்...

------த .சத்தியமூர்த்தி