Saturday, 31 October 2020

Naattu Nadappu-part5

நாட்டு  நடப்பு -5 

மதத்தாலே  பிரிந்து  நின்று 
இனத்தாலே  மாறுபட்டு
  
ஜாதிக்கொரு  சங்கம்  வைத்து 
வீதிக்கொரு  கூட்டம்  போட்டு 

நாளுக்கொரு  போராட்டம் 
நாடெங்கும்  நடத்திக்கொண்டு 

இந்தியாவின்  ஒற்றுமையை 
இமையமெனப்   புகழ்வதுண்டு 

ஒன்று பட்ட இந்தியாவென்பது 
ஒருமித்த  மனமுடைய  மக்களின்
  ஒற்றுமையை  ஓங்கி  உலகுக்கு  பறைசாற்றுவதே  

இனம்கடந்து , மொழிகடந்து , மதங்கடந்து 
இதயத்தால்  ஒன்று படும்  பொன்னாலே 

இந்தியாவின்  வளர்ச்சிக்கி 
 வித்திடும்   திருநாளாகும்

இராமன்  ஆண்டால்   என்ன ? 
இராவணன்  ஆண்டால்  என்ன ? 
என்று  ஒரு தலைமுறை  ஏமாந்தது  போதும்  

இளைய  தலைமுறையே  பட்டிதொட்டியெல்லாம் சென்று வாக்குப்பதிவின்  அவசியத்தை  உணர்த்துங்கள் 

அனைவரும்  வாக்களிப்பதின்  மூலமாகத்தான் 
வருங்கால  தலைமுறையின்  தலையெழுத்தை 
மாற்றமுடியும் 

அருகில்  உள்ள  வாக்குச்சாவடிக்கு  
அனைவரும்  கட்டாயம்  செல்லுங்கள்

அலட்சியமாய்  இல்லாமல்  ஆற்ற வேண்டிய
ஜனநாயக  கடமையை  தவறாமல்  செய்யுங்கள் 

நாட்டு  நடப்பு  தொடரும் ..

--------த .சத்தியமூர்த்தி     

 

    






Saturday, 24 October 2020

Naattu Nadappu-part4

நாட்டு  நடப்பு-4
  
ஒட்டிய  வயிறோடும்  
ஒடுங்கிய  உடலோடும்
 
ஏங்கிய விழியோடும் 
ஏழைகள்  பிணியோடும் 

பாதையின்  ஓரத்தில்  
பல  காலம்  கிடக்கின்றார் 

யார்  இதற்குப்  பொறுப்பு ?
யார்  இவர்களைப்  பார்ப்பது ?

சமதர்ம  சமுதாயம் 
பொதுவுடைமை  உபதேசம் 

சோஷலிச  சித்தாந்தம் 
கம்யூனிஸ  வேதாந்தம் 

ஜனநாயக  தத்துவமெல்லாம் 
பேச்சளவில்  இனிக்கிறது 
எழுத்தளவில்   இருக்கிறது 
ஏட்டளவில்  மணக்கிறது 

முதலாளித்துவ  மார்க்கம்  மட்டும்  
நாட்டளவில்  
நடைமுறையில் 
காணப்படுகிறது 
      
இந்தியாவின்   இருப்பு  முழுதும்
இருபது  பண  முதலைகளிடம் 
முடங்கிவிட்டது 

தேர்தல்  காலங்களில் 
 எல்லா  கட்சிகளும்
இவர்களிடம்  கையேந்துகிறது 

தேர்தெடுக்கும்  அரசாங்கம்  பதிலுக்கு
பல  சேவைகளையும்  
சலுகைகளையும்
 கொடுக்கிறது

இந்தியாவை  மறைமுகமாய் 
பண  முதலைகளே  
ஆள்கிறது 

   நாட்டு  நடப்பு  தொடரும் .....

---த .சத்தியமூர்த்தி    








Saturday, 17 October 2020

Naattu Nadappu-part3

 நாட்டு  நடப்பு --3

ஒரு  ரூபாய்   சாதனைக்கு 
ஒன்பது   ரூபாய்   விளம்பரம் 

கறை  வேட்டிக்  கட்டிக்   கொண்டு 
திரு  வீதி  ஊர்வளம்   

 ஆட்சி   அலுவல்களில்  
கட்சிக்காரன்   தலையீடு 

சுதந்திரமாய்   முடிவெடுக்க   முடியாமல் 
அதிகாரிகளின்  திண்டாட்டம் 

 அதிகாரிகள்  மட்டத்தில்  லஞ்சத்தை   ஆரம்பித்து 
அரசியல்வாதிகள்   தங்களை  வளர்த்துக் கொண்டார்கள் 

அரசியலில்  வந்ததாலே  
வசதி  வாய்ப்புகள்   பெறுகிப்போச்சு

எழுதப் படிக்க  தெரியலேன்னாலும் 
ஏழு  தலைமுறைக்கு  சொத்தாச்சி 

பட்டிமன்ற  விவாதங்கள்  
பகட்டான  விளம்பரங்கள் 
வரவேற்பு  வளையங்கள்    
வான  வேடிக்கைகள்  

மக்களின்  வரிப்பணம் 
பல  வழியில்  பாழாச்சு 

குலத்தொழிலை  ஒழித்துக் கட்ட 
போராடி  வெற்றி  பெற்றோர்

குலத்தொழிலில்  விதி விலக்காய்
அரசியலை  மட்டும்  விட்டார் 

வாரிசுவை  உருவாக்கி  
அரசியலில்  வரவழைத்தார்

அதிகாரத்தில்  அமர வைத்து
அலங்கரித்து  அழகு  பார்த்தார்

 நாட்டு  நடப்பு  தொடரும் ...

------த .சத்தியமூர்த்தி  

  
   

Saturday, 3 October 2020

Naattu Nadappu-part2

நாட்டு  நடப்பு -2

அனுபவ   அறிவு   இல்லை   
ஆளுகின்ற   திறமை   இல்லை 

விஷய   ஞானம்   ஏதுமில்லை 
விளம்பரப்   பிரிய முண்டு 

திறமையான   திட்டமில்லை 
தில்லு   முல்லுவுக்கு   குறைவில்லை 

பொது வாழ்வில்  ஒழுக்கமில்லை 
போர்ஜரிக்கு   அளவுமில்லை 

லட்சியத்திற்கு   வெற்றியில்லை 
லஞ்சத்துக்கு  பஞ்சமில்லை 

கொள்கைக்கு  மதிப்பில்லை 
கொள்ளைக்கு  முடிவில்லை

புத்தன்  பிறந்த  மண்ணில்  இன்னும் 
புனிதம்  வந்து  கலக்கவில்லை 

காந்தி  கண்ட   கனவு  பல 
காலம்  சென்றும்  மலரவில்லை 

தேசியவாதி  வேடம்  போட்டும் 
தேசம்  பற்றி  நினைவுமில்லை 

வருங்கால  தலைமுறையின் 
வாழ்வுக்கு  உத்திரவாதமில்லை 

அடிப்படைக்  கல்வி  கூட
கிடைப்பதற்கு  வசதியில்லை 

பட்டுச்சட்டை  போட்டு  தினம் 
பார்த்து  மகிழும்  ஆசையில்லை 

ஒட்டுப்  போட்ட  சட்டை  கூட 
ஒரு  சிலருக்குக்  கிடைப்பதில்லை 

 விருந்து  போல   உணவுண்டு  
செரிப்பதற்கு  மருந்து  உண்ணும் 
மேட்டுக்குடி  மக்களல்ல.. 

பசிப்பிணியைப்    போக்கிக்கொள்ள  
பழைய  கஞ்சி  கிடைத்தாலும்  
அமுதமென  கருதுகின்ற 
தெருவோர  பிரஜைகள்..  
 
நாட்டு  நடப்பு  தொடரும் .....

------த .சத்தியமூர்த்தி