தமிழன்னை
செந்தமிழர் நாடென்று எம் முன்னோர் பெயரிட்ட
முத்தமிழ் மாநிலத்தில் பிறந்திட்ட இளங்கவிஞன்
தவழ வைத்த மண் பெருமை தரணியெங்கும் எதிரொலிக்க
தமிழ் கொண்டு தொடுக்கின்ற கவிமாலை
தனைக் கொண்டு தமிழ்த்தாய்க்கு சமர்ப்பிக்கும் பாமாலை இதுவாகும்
உண்ட பின் தான் இனிப்பாகும் அமுதென்ற பொருளெல்லாம்
வெறும் உச்சரிப்பில் இனிதாகும் தமிழென்ற அமுதே தான்..
கம்பன் முதல் இளங்கோ வரை காவியங்கள் பல காண
காரணமாய் அமைந்த மொழி ...
காலங்கள் பல கடந்தும் என்றும் இளையவளாய் இருக்கின்ற
கன்னித்தமிழயே ! கனிரசமே ! கற்கண்டே !
இளங்கவிஞன் எழுதுகின்ற கவிக்கெல்லாம் அடி கொடுத்து
சிந்தனையில் கலந்துவிட்ட சீர்மிகு தமிழ்த்தாயே ! உன் பெருமை யான் பாட பெறவில்லை முழுவளர்ச்சி என்றாலும்
ஆசையிலே எழுதுகிறேன் அம்மா உன் துணையோடு ..
வீரத்தின் விளை நிலமே நீ வாழும் மண்ணம்மா ..
மானத்தின் உறைவிடமோ உன் மாநிலத்து பெண்ணம்மா ..
காதலின் பெருமையை சொன்னதே உன் கவிதையில் தானம்மா ..
ஏடெல்லாம் வீடெல்லாம் மணக்கின்ற மொழியம்மா ..
எண்ணத்தை , ஏக்கத்தை , வெளிப்படுத்தும் வழியம்மா ..
உன் பாதமலர் பணிந்து வணங்குகிறேன் நானம்மா ..
என்னோடு என்றென்றும் கலந்துவிட்ட தெய்வமம்மா ..
தமிழத்தாயே ! தமிழே ! நீயே என் உயிரம்மா ..
------------------ த.சத்தியமூர்த்தி